என் கவிதையிலும் மலர் வாசம் உன் பெயரால் வந்ததடி! நீ எனக்கு இல்லையென்றல்-மனம் செத்துபோக சொல்லுதடி! உனைப்பற்றிய நினைவுக்கு-நல் நினைவாலயம் வேண்டுமென்றே! நித்தம் எனதுயிரை தினம் தக்க வைத்து கொண்டேனடி! நீ பத்து அடி விலகினாலும்-எனக்கு பத்து மைல் ஆகுதடி! நீ பதுங்கி நின்று பார்க்கையிலே மனம் பஞ்சுப் பஞ்சாய் பறக்குதடி! உன் முகமதனை தினம் பார்க்க என் அகமனது ஏங்குதடி! இந்த அண்டமே உனைப் பார்க்க இந்த அகிலமே சுற்றுதடி! உனதழகை வர்ணிக்க-புவியில் கவிதைகளே இல்லையடி! அதை வெல்ல நான் நினைத்து கவிதை எழுதி தோற்றேனடி! |
No comments:
Post a Comment