Tuesday, January 18, 2011

தேவதை அவள்!

தேவதை அவள்!
தினம் வதைத்தவள்-அவள்!
நினைவால் உருகிய நாட்கள் பல
அவள் முத்து பல் வரிசைக்கு
என் சொத்தனைத்தயும் தத்து கொடுக்க தயார்!
கரு நிறம் என்றனர் உனை - ஆம்
கருமைதான் நீ - அவர்களுக்கு!
கரும்பும் கருப்பே
சுவைத்திலார் உண்டோ?

நித்தம் அவள் நினைவை சுமந்து
சித்தம் பெருவேனேயண்றி செத்தொழியமாட்டேன்
என செந்நீரால் சுளுரைத்தேன்!

சொல்லவா எனதன்பை!
சொல்ல பயந்து சொன்னேன்-அன்றே
தனிமையில் நின்று தருக்கானை.

பெண்களை மலர் என்பர் - மூடர்கள்
உண்மையில் மலரல்லவே!
வண்டுகள் தேனெடுக்க அஞ்சுவதிலையாம் - அந்தோ!
அஞ்சுவதேன் ஆண்கள்!

பெண்களை நிலா என்பர் - சிலர்
ஆசை துண்டி அகண்டிடும் என்பதற்கா?

நாட்கள் பல நகர்ந்தன
யானும் முடிவெடுதிலன்

நாணயத்தில் தகவு பார்த்தேன் - அது
நான் நயம் அல்லவே என்றுரைத்து
சாக்கடை துவாரத்தில் சகதியாக போனது

நாள் குறித்தேன் நாவுரைக்க
நாளும் வந்தது அவ்வண்ணமே
தைரியத்துடன் நான் செல்ல
அவனுடன் அவள் வந்தாள்!

அறிமுகம் அரங்கேறியது - ஆம்
அவள் காதலனென்று
அவள் உரைத்தாள் என்னிடம்
"இன்று உனக்கு தை ஒன்று"
"எனக்கு இன்று சித்திரை ஒன்று"

புரியாத எனதறிவுக்கு புரிய சற்று நாழிகைதான் ஆனது
அய்யோ! அவள் மூன்று மாதம்!

என் கேணி மீன் இன்று அவள் துண்டிலில்
நான் வளர்க்க நினைத்தேன்
அவன் சமைத்தல்லவா சாப்பிட்டான்
வாழ்த்த மனமின்றி வந்த வழி அகண்டேன்

கடந்தது மாதம் பத்து
அவள் கரத்தில் ஒரு முத்து
விதைத்தவன் தரிசு நிலம் தேட
அவஸ்தையாய் அவள்!

குடும்பத்தினர் வாட்டினர் அவளை
அவள் காட்டினாள் என்னை
தடி எடுத்து தடயம் வைத்து
வேலி கோர்க்க வைத்தனர் என்னை
இன்று அறிந்தும் அறியாமல் போல் அவள்!
தெரிந்தும் நிலைதடுமாறிய நிலையில் நான்!

No comments:

Post a Comment