Wednesday, March 9, 2011

அடியே..................!

  • என் கவிதையிலும் மலர் வாசம்
  • உன் பெயரால் வந்ததடி!
  • நீ எனக்கு இல்லையென்றல்-மனம்
  • செத்துபோக சொல்லுதடி!
  • உனைப்பற்றிய நினைவுக்கு-நல்
  • நினைவாலயம் வேண்டுமென்றே!
  • நித்தம் எனதுயிரை தினம்
  • தக்க வைத்து கொண்டேனடி!
  • நீ பத்து அடி விலகினாலும்-எனக்கு
  • பத்து மைல் ஆகுதடி!
  • நீ பதுங்கி நின்று பார்க்கையிலே
  • மனம் பஞ்சுப் பஞ்சாய் பறக்குதடி!
  • உன் முகமதனை தினம் பார்க்க
  • என் அகமனது ஏங்குதடி!
  • இந்த அண்டமே உனைப் பார்க்க
  • இந்த அகிலமே சுற்றுதடி!
  • உனதழகை வர்ணிக்க-புவியில்
  • கவிதைகளே இல்லையடி!
  • அதை வெல்ல நான் நினைத்து
  • கவிதை எழுதி தோற்றேனடி!

Monday, January 24, 2011

கத கதையாம் காரணமாம்.....

கத கதையாம் காரணமாம்..
காரணத்தில் ஒரு தோரணமாம்..
தோரணத்தில் ஒரு தொக்காடயாம்..
தொக்கடாயில் ஒரு வைக்கபுல்லாம்...
வைக்கபுள்ள கொண்டு மாட்டுக்கு போட்ட...
மாடு ஒரு பாலு தந்துச்சாம்...
பால கொண்டுபோய் சாமிக்கு ஊத்தனா...
சாமி ஒரு பூ தந்துச்சாம்...
பூ கொண்டுபோய் ஆத்துல போட்ட..
ஆறு ஒரு மீன் தந்துச்சாம்...
மீனா கொண்டு போய்  அப்பத்தா கிட்ட கொடுத்தா...
அப்பத்தா கிழவி....................................
ஆக்க மாட்டேன்னு மேய்க்க போய்ட்டா...............

பருப்பாம் பருப்பாம்.........

பருப்பாம் பருப்பாம்.........
பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?
முருங்கைப்பூ
முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்………

தோசை அம்மா தோசை.........

தோசை அம்மா  தோசை
அம்மா செஞ்ச தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து செஞ்ச தோசை

அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒன்னு
திங்க திங்க ஆசை
திருப்பி கேட்ட பூசை!

அவரவர் வீட்டுக்கு..........

அவரவர் வீட்டுக்கு

அவரைக்கா சோத்துக்கு
பிள்ளைபெத்த வீட்டுக்கு
புளியங்கா சோத்துக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வர்றேன் விளையாட்டுக்கு

பொக்கைப் பல்லு டோரியா.........

பொக்கைப் பல்லு டோரியா

பட்சி பாக்கப் போறியா?

பட்டாணி வாங்கித் தாறேன்

பள்ளிக்கூடம் வாறியா?
 

Wednesday, January 19, 2011

மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்

மொட்டையும் மொட்டையும் - சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!